ETV Bharat / state

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு

author img

By

Published : Jan 11, 2022, 3:30 PM IST

பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

மாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலு

சென்னை: பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று (ஜனவரி 11) நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சிலம்பரசன், பாரா ஒலிம்பிக் மாரியப்பன், விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் உள்ளிடோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இணைய வழியாகப் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "கல்வி மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்கள் சாதித்துள்ளனர்.

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு

அதேபோன்று இன்று பட்டம் பெறும் நபர்கள் தங்கள் துறையில் சாதிப்பார்கள் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமைகொள்கிறேன். நேரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

மாரியப்பன் தங்கவேலு பேசுகையில், "விளையாட்டு வீரராக எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதினை எனக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக் கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிம்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.