ETV Bharat / state

"தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை... ஒரு நடிகையாக அவர்களை மதிக்கிறேன்" - விசாரணைக்கு பின் மன்சூர் அலிகான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 5:18 PM IST

Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

mansoor ali khan appeared at the all-women police station in chennai for investigation
விசாரணைக்காக மன்சூர் அலிகான் சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்

விசாரணைக்காக மன்சூர் அலிகான் சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மனுசூர் அலிகான் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சிற்கு நடிகை த்ரிஷா தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தியது. மேலும், இது தொடர்பாக புகார் கடிதமும் அனுப்பியது. அதன் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவாக பேசுதல், பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தும் வகையில் பேசி தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று (நவ. 23) ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால் மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து தனக்கு உடல் ரீதியாக பிரச்சினை உள்ளதால் இன்று ஆஜராக முடியாது எனவும், நாளை ஆஜராகுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டும் எனவும் கடிதம் ஒன்றை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார்.

அது மட்டுமல்லாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் மனு ஒன்றை அளித்து இருந்தார். இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவு ஆகிவிட்டதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, தான் தலைமறைவு ஆகவில்லை என மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அளித்த மனுவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என குறிப்பிடுவதற்கு பதிலாக, நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என மாற்றி குறிப்பிட்டு இருந்ததால், முதலில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை மன்சூர் அலிகான் வாபஸ் பெற்றார்.

இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என குறிப்பிட்டு, புதிய மனு ஒன்றை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நாளை (நவ. 23) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் த்ரிஷா குறித்து அவதூராக பேசிய சர்ச்சை வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜரானார். ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி முன்னிலையில் மன்சூர் அலிகானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விசாரணை முடிந்து காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான் தனிப்பட்ட முறையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனை விமர்சிக்கவில்லை என்றும் ஒரு நடிகையாக அவர்களை மதிக்கிறேன் என்றும் கூறிவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: “இது என்கவுண்டர் இல்லை..தற்காப்பு” - ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் குறித்து திருச்சி எஸ்பி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.