ETV Bharat / state

காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

author img

By

Published : Jul 28, 2020, 9:35 PM IST

சென்னை: சொத்து தகராறு காரணமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி
மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அருள்தாஸின் இளைய சகோதரர் யோசேப்பு, அவர்களது பூர்வீக வீட்டை அபகரித்துக்கொண்டு தனது அண்ணன் அருள்தாஸ், தாயையும் வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

இதனையடுத்து சென்னை வேப்பேரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக அருள்தாஸ் புகார் அளிக்க வந்தார். அப்போது அவரிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், இணைய வழியில் புகாரை அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அருள்தாஸ் புகார் அளிக்க முடியாத ஆதங்கத்தில், காவல் துறையினர் முன்பாகவே மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அறிவுரை கூறி வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாதிப் பெயரைக் கூறி திட்டினார்கள் - குடும்பத்துடன் இளைஞர் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.