ETV Bharat / state

பண மோசடியில் தலைமறைவான நபர் விமான நிலையத்தில் கைது

author img

By

Published : Jun 22, 2021, 10:56 AM IST

பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று ஓராண்டு காலமாக தலைமறைவாக இருந்த நபர், கத்தாா் நாட்டிலிருந்து திரும்பி வந்தபோது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.

Man arrested for money laundering  money laundering  chennai airport  Man arrested for money laundering at chennai airport  chennai news  chennai latest news  crime news  சென்னை செய்திகள்  குற்றச் செய்திகள்  பண மோசடி  பண மோசடியில் தலைமரைவான நபர் கைது  விமான நிலையத்தில் கைது  சென்னை விமான நிலையத்தில் கைது  பண மோசடியில் தலைமரைவான நபர் சென்னை விமான நிலையத்தில் கைது
தலைமரைவான நபர் விமான நிலையத்தில் கைது...

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் லாசா் (38) மீது பணமோசடி உள்பட சில வழக்குகள் உள்ளன. இவரைக் கைதுசெய்வதற்காக காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சுபாஷ் லாசா் வெளிநாட்டிற்குத் தப்பியோடி் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குற்றப்பிரிவு காவல் துறையினர், சுபாஷ் லாசரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இவர் குறித்த தகவல் அளித்தனர்.

பறந்துசென்ற கிளி: தேடிப்பிடித்த போலீஸ்

இந்நிலையில் நேற்று (ஜூன் 21) நள்ளிரவு கத்தார் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அவ்விமானத்தில் பயணித்த பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), ஆவணங்களை குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது வெளிநாட்டில் ஓராண்டாகத் தலைமறைவாகி இருந்த சுபாஷ் லாசா் பிடிபட்டார். இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள், சுபாஷ் லாசரை வெளியில் விடாமல், அலுவலக அறையில் அடைத்துவைத்தனர். அத்தோடு கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முறையாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.