ETV Bharat / state

"2024 தேர்தல் திமுக vs பாஜக தான்" - அண்ணாமலை அதிரடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 3:05 PM IST

K.Annamalai: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் முதல் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்தது. அதன்பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, "திமுக-விற்கும் பாஜக-விற்கும் தான் போட்டி உள்ளது. திமுகவிற்கு - பாஜக சாவல்" என தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் முதல் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. NDA கூட்டணியில் நிறையக் கட்சிகள் வந்து சென்றுள்ளனர். புதிய பரிமாணத்துடன் பல கட்சிகள் மீண்டும் வந்து இணைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்கும்.

பாஜக தேசிய ஜனநாயக கட்சியை முன்னெடுத்துச் செல்கிறோம். 2024 பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரும். 2024 வெற்றி வேட்பாளர்கள் மற்றும் வாக்கு விழுக்காட்டை இனி பார்ப்பீர்கள். அந்த அந்த கட்சிகள் அவர்களின் வளர்ச்சியை மட்டுமே பார்ப்பார்கள் பாஜக தன்னுடைய வளர்ச்சியை பார்க்கிறது. அதிமுக வெளியேறியதற்கு ஏன் வருத்தப்பட வேண்டும்? ஏன் சந்தோஷம் பட வேண்டும்? பாஜக வலிமை அடைய வேண்டும் என்பதே முதல் நாளிலிருந்து என்னுடைய நோக்கம், 2024 பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். தமிழ்நாட்டில் 39க்கு 39 இடங்களும் நரேந்திர மோடிக்கு வரும்.

அதிமுக மட்டும் என் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை பல கட்சிகள் பல விதமான குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். அதற்குப் பதில் அளித்தால் சரியாக இருக்காது. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். எந்த பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக உள்ளேன். குற்றச்சாட்டுகள், அவதூறுகள் என் மீது எப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள், அதனைப் பொருட்படுத்தவும் இல்லை, அதற்கான பதிலையும் சொல்ல வில்லை, அதனால் இதற்கும் பதிலளிக்க விரும்பவில்லை.

2024 தேர்தல் முடிவுகள் வந்தால் அனைத்தும் தெரியவரும், மக்களில் ஆதரவு அன்பு எந்த பக்கம் இருக்கிறது எனத் தெரியும். இந்த தேர்தல் முடிவு பாஜகவிற்கு ஆதரவாகத் தான் இருக்கும். திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி உள்ளது. திமுகவிற்கு - பாஜக சாவல் விடுகிறது. இதனை 2024 தேர்தலில் பார்க்கலாம். 2024 திமுக vs பாஜக 10 வருடத்தில் என்ன செய்தோம் என்பதை மக்கள் கேட்பார்கள் அதனை நாங்கள் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை அதனைக் கொடுக்கிறோம். திமுக ஆட்சியை மக்கள் மதீப்பீடு செய்வார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுகவினருக்கு சிறுபான்மையினரின் வாக்கு கிடையாது" - மனிதநேய மக்கள் கட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.