ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @4PM

author img

By

Published : Jun 4, 2020, 3:47 PM IST

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @4PM
Top 10 news @4PM

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

லக்னோ: பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரில் ஆறு பேர் தங்கள் வாக்குமூலத்தை அளிக்க லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

செம்மொழித் தமிழாய்வு: மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு!

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குநராக பேராசிரியர் சந்திரசேகரை நியமனம்செய்தது பாராட்டுக்குரியது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை: 'விவசாயிகள், விதை உற்பத்தித் துறைக்கு மாற்று வழி ஏற்படுத்தித் தரவேண்டும்'

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை 27 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வதாக அறிவித்துள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தித் துறைகளுக்கு அரசு மாற்று வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என தேசிய விதைக் கழகத்தின் இயக்குநர் இந்திரா ஷேக்கர் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய குறுங்கட்டுரை இதோ....

சத்தீஸ்கரில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் எட்டு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து தூக்கி வீசிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பும் நிக் ஜோனஸ்

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து இனவெறிக்கு எதிரான செயல்களில் களமிறங்கியுள்ள நிக் ஜோனஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தனியார் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்துள்ளார்

நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் ஜெனிஃபர் ஆனிஸ்டன்

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்ட 27 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை ஏலத்தில் விட நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் முடிவெடுத்துள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் டி20 கிரிக்கெட்....!

மெல்போர்ன்: டார்வின் கிரிக்கெட் கிளப் சார்பாக நடத்தப்படும் டி20 தொடர், ரசிகர்கள் முன்னிலையில் நடக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு மருந்து: சர்வதேச நாடுகளுடன் கைகோர்த்த இந்தியா

லண்டன்: சுமார் 35 நாடுகள் பங்கேற்கவுள்ள கரோனா தடுப்பு மருந்து வீடியோ கான்பரன்சிங் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.

குறுந்தகவல் பயன்பாட்டுக்கு வழிவிடும் டிராய்

ஒரு கைப்பேசி பயனர் தினசரி 100 குறுந்தகவல் அனுப்பும் எஃப்.யூ.பி வரம்பை டிராய் ரத்து செய்துள்ளது. 100 குறுந்தகவல் அனுப்பப்பட்ட அதன் மீதான 50 பைசா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.