ETV Bharat / state

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் - சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Oct 17, 2022, 1:03 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்ட பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Etv Bharatஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்
Etv Bharatஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்

சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்றவற்றின் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இது குறித்து கூறுகையில், ‘இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 19 ம் தேதி வரை இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் பதிலுரை வாக்கெடுப்பு நடைபெறும்’ எனவும் தெரிவித்தார்.

மேலும், நாளை (அக்-18)நடைபெறும் பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, தேவைப்பட்டால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இந்தி எதிர்ப்பு அறிக்கை குறித்தும் விவாதிக்கபட உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர் கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் 4 கடிதமும் ஓ.பி.எஸ் தரப்பு இரண்டு கடிதமும் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் கடிதம் கொடுத்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் பட்சத்தில் உரிய பதில் பேரவையில் அளிக்கப்படும், இது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கடிதம் அளித்துள்ள அதிமுக உறுப்பினர்கள் தனது அறையிலும் வந்து இதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். தங்களது கட்சியின் பொன்விழா காரணமாக இன்றைய பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், நாளை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக சட்டவிதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம் - ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.