ETV Bharat / state

நீட் தேர்வில் விடை அளிக்கும் முறையில் மாற்றம்

author img

By

Published : Jul 14, 2021, 12:00 PM IST

முதல் முறையாக நீட் தேர்வில் சாய்ஸ் அடிப்படையில் விடை அளிக்கும் முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

neet exam 2021
neet exam 2021

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது நேற்று (ஜூலை 13) தொடங்கியது.

வழக்கமாக நீட் தேர்வில் 180 கேள்விகள் இடம்பெறும். அதில் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டு முதல் அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு பாடத்திலும் ஏ பிரிவில் 35, பி பிரிவில் 15 என நான்கு பாடங்களுக்கு தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறவுள்ளன. இவற்றில் 180 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

இதில் பி பிரிவில் கேட்கப்படும் 15 கேள்விகளுக்கு நன்கு தெரிந்த 10 கேள்விகளுக்கு சாய்ஸ் அடிப்படையில் விடையளித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயபிரகாஷ் காந்தி ட்விட்

இது குறித்து கவ்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது ட்விட்டரில், "முதல்முறையாக நீட் தேர்வில் சாய்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாட திட்டத்தில் தயாராகும் மாணவர்களுக்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெயபிரகாஷ் காந்தி ட்விட்
ஜெயபிரகாஷ் காந்தி ட்விட்

இதையும் படிங்க: நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.