ETV Bharat / state

இராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலை - முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 2:47 PM IST

CM Stalin inalugurates Rabindranath statue in chennai: சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Etv Bharatஇராணி மேரி கல்லூரியில் இரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Etv Bharatஇராணி மேரி கல்லூரியில் இரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலை

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இராணி மேரி கல்லூரி வளாகத்தில் 29.70 லட்சம் ரூபாய் மதிப்பில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை இன்று (செப்.8) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  • செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு… pic.twitter.com/jQEnZAR2yq

    — CMOTamilNadu (@CMOTamilnadu) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டி வளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், இந்தியத் திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் 29.70 லட்சம் ரூபாய் மதிப்பில் 7 அடி உயரத்தில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அதை இன்று (செப்டம்பர் 8ஆம் தேதி) முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் மே 7, 1861 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என்ற பன்முகத்திறன் கொண்டவர் ரவீந்திரநாத் தாகூர் 1913 ஆம் ஆண்டு அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ படைப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து, அனைவராலும் ‘குருதேவ்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய “ஜன கண மன” பாடல் இந்தியத் திருநாட்டின் தேசிய கீதமாக விளங்குகிறது. 1919ல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

தாகூர் சிலை திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மு,பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடிய மகேந்திர சிங் தோனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.