ETV Bharat / state

சமூக விலகல் பின்பற்றப்படுகிறதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

author img

By

Published : Apr 8, 2020, 1:33 PM IST

சென்னை: திருச்சி சிறப்பு முகாமில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகல் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஏப்ரல் 9ஆம் தேதிவரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

how to maintain social distance in trichy special camp, HC ask report
how to maintain social distance in trichy special camp, HC ask report

தமிழ்நாட்டில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்த கொரியாவைச் சேர்ந்த சோ ஜே வான், சோய் யாங்க் சுக் ஆகியோர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ஏய்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும், சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது.

ஆனால், தங்களைச் சிறையிலிருந்து விடுவிக்காமல், திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்துவிட்டதாகவும், அந்த முகாமில் 80 பேர் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தங்க அனுமதி வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். விசாரணையின்போது, சமூக விலகலைப் பின்பற்றி அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர், விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து மனுவுக்கு ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நீதிமன்றப் பணிகளை தொடங்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து கேட்பு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.