ETV Bharat / state

மதுரை டூ சென்னை: 50 நிமிடத்தில் பெண்ணிற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை!

author img

By

Published : Feb 27, 2021, 7:02 PM IST

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த மதுரை இளைஞரின் இருதயம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய கோளறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணிற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

heart transplant surgery
heart transplant surgery

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயதான பெண் ஒருவர் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நிலை மிக மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்நிலையில், மதுரை சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தமிழ் மணி (21) என்ற இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அவரது உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இருதய மாற்று அறுவை சிகிச்சை

இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து 50 நிமிடத்தில் தமிழ்மணியின் இதயம் சென்னை விமானநிலையம் வந்தடைந்து. அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: உயிரைக் காப்பாற்ற மெட்ரோவில் பறக்கும் இதயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.