ETV Bharat / state

குட்கா கடத்தல்காரர்கள் காவலரை கொல்ல முயற்சி!

author img

By

Published : Aug 29, 2020, 3:50 PM IST

Updated : Aug 29, 2020, 4:14 PM IST

சென்னை: வாகன சோதனையின் போது குட்கா கடத்திவந்த ஜீப்பை தடுத்த காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா
குட்கா

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் - பெரியபாளையம் நெடுஞ்சாலை, நத்தம்மேடு பகுதியில் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று இரவு (ஆக.28) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாகவந்த ஜீப்பை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த ஜீப் நிற்காமல் காவல் துறையினர் மீது மோதி கொல்ல முயற்சி செய்தது.

இதில், காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்பட அனைவரும் நுாலிழையில் உயிர் தப்பினர். இதனையடுத்து, அந்த ஜீப்பை விரட்டி மடக்கிப் பிடித்த காவல் துறையினர், ஜீப்பை சோதனை செய்தபோது உள்ளே இரு மூட்டைகளில் 30 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, ஜீப்புடன் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநர் உள்பட 2 பேரை பிடித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இருவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், குட்காவை ஜீப்பில் கடத்தி வந்தது திருநின்றவூர், நடுகுத்தகையைச் சார்ந்த மளிகைக் கடை வியாபாரி முருகதாஸ் (42), திருநின்றவூர், கன்னடபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கோதண்டபாணி (49) என்பது தெரியவந்தது.

மேலும், காவல் துறையினர் முருகதாஸ் வீட்டை சோதனை செய்தபோது, அங்கும் 300 கிலோ எடை கொண்ட குட்கா பொருள்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். வியாபாரி முருகதாஸ், கர்நாடக மாநிலத்திலிருந்து குட்காவை ஜீப்பில் கடத்தி வந்து கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினர், முருகதாஸ், கோதண்டபாணி இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று (ஆக. 28) காலை ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் செங்கல்பட்டு கிளைச் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

சென்னை
குட்கா கடத்தியவர் கைது

இதையும் படிங்க: பக்தர்கள் இல்லாமல் நடைபெற உள்ள வேளாங்கண்ணி திருவிழா!

Last Updated : Aug 29, 2020, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.