ETV Bharat / state

காசிமேடு மீன் விற்பனைக் கூடத்தில் குவிந்த மக்கள் - கரோனா தொற்று பரவும் அபாயம்

author img

By

Published : Sep 6, 2020, 7:18 PM IST

சென்னை: காசிமேடு மீன் விற்பனைக் கூடத்தில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் ஏராளமான மீன் விற்பனையாளர்கள் கூடியதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

fish-sales-hall-held-without-following-social-distancing
fish-sales-hall-held-without-following-social-distancing

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.

இந்நிலையில், காசிமேட்டில் உணவுப் பொருள்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மீன் விற்பனை செய்வதற்கு முதலில் அனுமதி அளித்தது. பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி, மீன்பிடி துறை அலுவலகம், மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த இரண்டு மாதங்களாக காசிமேடு மீன் விற்பனைக் கூடம் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்.06) காசிமேடு மீன்பிடி துறைமுக விற்பனைக் கூடம் வழக்கம் போல் இயங்கியது. இதில் ஏராளமான மீன் விற்பனையாளர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது.

மீன் விற்பனையாளர்களுக்கென முறையான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏராளமான கூட்டம் கூடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வனத்துறையினரின் கவனகுறைவால் புள்ளிமான் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.