ETV Bharat / state

"பஞ்சம், பசி பார்த்த சனம்...படை இருந்தும் பயந்த சனம்" - வெளியானது மாமன்னன் முதல் பாடல்!

author img

By

Published : May 19, 2023, 6:14 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய காந்த சக்தியாக இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசி வரும் உன்னதமான படைப்பாளியாக அறியபடுபவர். தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திலேயே அதனை உரக்கப் பேசியவர்.

தாழ்த்தப்பட்ட மகக்ளை சேர்ந்த ஒருவனின் வாழ்க்கையின் வலியை நம்முள் கடத்தியவர். நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. யார் இந்த மாரி செல்வராஜ் என்று ரசிகர்கள் மத்தியில் புருவம் உயர்த்திய படமாக இவருக்கு அமைந்தது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் உடன் கைகோர்த்தார்.

இவரது இரண்டாவது படமான கர்ணன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. முன்னணி நடிகரின் வாயிலாக காழ்ப்புணர்ச்சி அரசியலை தீர்க்கமாக பேசினார் மாரி செல்வராஜ். கரோனா காலத்தில் வெளியான கர்ணன் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது தனது மூன்றாவது படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ளார்.

அந்த படத்திற்கு மாமன்னன் எனறு பெயரிட்டுள்ளார். இது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கூடுதலாக நடிகர் வடிவேலு ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவின் தோற்றம் வித்தியாசமாக இருந்ததையடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏஆர் ரகுமான் இசையில் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை வடிவேலு பாடியுள்ளார். பாடலின் வீடியோ கர்ணன் படத்தை போலவே ஆழமான உணர்வுகளை கொண்டுள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது. வடிவேலு குரலில் இந்த பாடல் வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராசா கண்ணு என தொங்கும் அப்பாடலின் வரிகளும் அழுத்தமாக உள்ளன.

"காட்டுக்குள்ள கருவமுள்ளா ராசா" "நாம கால் நடக்க பாதையாச்சே ராசா" நடந்த பாத அத்தனையிலும் ராசா அதுல வேலி போட்டு மறுச்சதாரு ராசா...திக்கு தெச தெரியலையே ராசா அத தேடித்தேடி அலையுறமே ராசா, பட்டகாயம் எத்தனையோ ராசா அத சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா...

பஞ்சம், பசி பார்த்த சனம்,படை இருந்தும் பயந்த சனம் உள்ளிட்ட வரிகள் கேட்போரை வெகுவாக ஈர்த்துள்ளன. பாடலின் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆடுவதும் போலவும் கர்ணன் படத்தில் வருவது போலவே கையில் வாளுடன் நிற்கிறார். மாமன்னன் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" - மாமன்னன் அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.