ETV Bharat / state

பள்ளிக் கல்வித்துறையில் போலி பணி நியமன உத்தரவு: காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

author img

By

Published : Oct 4, 2021, 4:33 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை பெயரில் போலி பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது குறித்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார்.

school
school

அரசுத் தேர்வுத்துறையில் உதவியாளர் பணிக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் போலி பணி நியமன உத்தரவு வழங்கப்பட்ட தகவல் கடந்தவாரம் வெளியானது.

இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த போலி பணி நியமன ஆணையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கையொப்பம் மற்றும் சீல் போலியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தேர்வுகள் துறையில், இளநிலை உதவியாளர்களுக்கான எந்த விதமான பணி நியமனங்களும் நேரடியாக நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு நேரடியாக பணி நியமனங்களை வழங்குவதற்கு அதிகாரம் இல்லாத நிலையில் போலியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கையப்பமிட்டு மோசடி நடந்திருப்பதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தேர்வுகள் துறையில் பணி வழங்குவதற்கான அதிகாரம் என்பது அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டுமே நடைபெறும் என்றும் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள மோசடி தொடர்பான தகவல்களின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.