ETV Bharat / state

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டிப்பூசல்?

author img

By

Published : Nov 20, 2022, 10:32 AM IST

இந்திரா காந்தியின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தற்போது தலைவர் என தனி தனியாக வந்து மரியாதை செலுத்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டிப்பூசல்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டிப்பூசல்

சென்னை: இந்திரா காந்தியின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கூட்டாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய செல்வ பெருந்தகை, ‘ராகுல் காந்தியின் நடைபயணம் எதிர்பார்த்ததை விட, ஏழை எளிய மக்கள் ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்துவோம் என புரட்சி முழக்கம் எழுப்பி வருகின்றனர். நாசகார சக்தியான பாஜகவை அகற்றிவிட்டு எல்லோருக்குமான ஆட்சியை ராகுல் காந்தி கொடுப்பார்.

தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தங்கள் கட்சியில் ரவுடிகள் இல்லை, ரவுடிகளை வைத்து கட்சி நடத்துவது பாஜக என விமர்சித்து கூறினார். பாஜகவில் சேர, குறைந்தபட்சம் 10 வழக்குகள் இருக்க வேண்டும்’ என விமர்சித்தார்.

பின்னர் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதல் குறித்த கேள்விக்கு நிர்வாகிகள் பேசி கொண்டிருந்த போது, கீழே விழுந்து காயம் ஏற்பட்டு அதனால், ரத்தம் வந்திருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.

மேலும், காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலை வாங்கி அதில் உள்ளவர்களை பாஜகவில் சேர்த்து வருவதாக விமர்சித்தார். சீனாவின் முன்னாள் அதிபர் மாசேதுங் நடத்திய நடை பயணம் எப்படிப்பட்ட புரட்சியை ஏற்படுத்தியதோ, அதே போல், ராகுல் காந்தியின் நடைபயணம் முடிவில், மோடியின் ஆட்சி இருக்காது காங்கிரஸ் நல்லாட்சி வரும்’ என கூறினார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல் நடைபெற்ற நிலையில் இந்நாள் தலைவர் கே எஸ் அழகிரியும் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி. கே.எஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் தனியாக சென்று இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக தங்கள் வர தாமதமானதாகவும் கட்சியில் யாருக்கும் அதிருப்தியும் இல்லை அனைவரும் திருப்தியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனி தனியாக சென்று இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தது குறித்தும், காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கைகலப்பு குறித்தும் ரூபி மனோகரன் குற்றச்சாட்டு குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது உட்கட்சி விவகாரம் என பதில் கூறாமல் சென்றார்.

இதையும் படிங்க: மழை காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் வரவேற்கும் வகையில் உள்ளது - விஜய பிரபாகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.