ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Jun 14, 2021, 9:07 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

'பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைப் படிவத்தில் சாதிப் பெயர்' சேர்க்கைப் படிவ விநியோகம் நிறுத்தம்!

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கைப் படிவத்தில், சாதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டதற்கு சமூக வலைதளத்தில் கண்டனம் எழுந்துள்ள நிலையில், அவைத் திருத்தப்பட வேண்டும் என, பரவலாகக் கோரிக்கை எழுந்துள்ளது.

உலக ரத்த கொடையாளர்கள் தினம்: ரத்த தானம் வழங்கிய மா. சுப்பிரமணியன்

சென்னை: இன்று உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரத்த தானம் செய்தார்.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 9,10,11ஆம் வகுப்பு மாணவர் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும், கரோனா தொற்று தளர்வுகள் உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 12 ம் வகுப்பு வரையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்பி

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சக்தி கணேசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனியார் ஆம்புலன்ஸ் சேவை கட்டணம் நிர்ணயம்: கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

சென்னை: கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதிமுக கூட்டம்: யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்விரோதம்: நண்பனை 'ஸ்கெட்ச்' போட்டு காலி செய்ய முயன்ற 7 பேர்!

போதையில் ஏற்பட்ட தகராறில் உடனிருந்த நண்பனை ஏழு பேர் சேர்ந்து சரமாரியாக ‌கத்தியால் தாக்கியுள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

மதுரை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது.

பிகார் அரசியல்: பாஸ்வான் கட்சியில் பிளவு!

லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து வெளியேறிய ஐந்து எம்.பி.க்கள் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேரவுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது.

ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல்: விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட் கட்சிகள் கோரியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.