ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Jun 13, 2021, 9:12 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

தமிழ்நாட்டில் மேலும் 14,016 பேருக்கு கரோனா உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 14,016 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய கார்!

மகாராஷ்டிரா: மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மூழ்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வறுமையிலும் கரோனா நிதிக்கு தங்க செயின்: முதலமைச்சரை ஈர்த்த மனு!

மேட்டூர் அணையை திறந்துவைக்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் மனுக்களை கொடுத்திருந்தனர். அதில், தன் துன்பத்தைக் கூறி வேலைவேண்டுமென கோரிக்கை வைத்தும், கரோனா நிதிக்காக 2 பவுன் தங்க சங்கிலியை அந்த மனுவினுள் வைத்த பெண் செளமியாவின் கடிதம் தன்னை ஈர்த்ததாக முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில் மேலும் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெண்களை ஏமாற்றி நகையை அபேஸ் செய்த கூஜா பூசாரி கைது!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி, பெண்களை ஏமாற்றி தங்க நகைகளைத் திருடிய கூஜா பூசாரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலியைக் கழுத்தறுத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் காதலியை கழுத்தறுத்துவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் கூடாது என்பதே உறுதியான கொள்கை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டம் கூடாது என்பதே அரசின் உறுதியான கொள்கை என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வறுமையிலும் கரோனா நிதிக்கு தங்க செயின்: முதலமைச்சரை ஈர்த்த மனு!

மேட்டூர் அணையை திறந்துவைக்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் மனுக்களை கொடுத்திருந்தனர். அதில், தன் துன்பத்தைக் கூறி வேலைவேண்டுமென கோரிக்கை வைத்தும், கரோனா நிதிக்காக 2 பவுன் தங்க சங்கிலியை அந்த மனுவினுள் வைத்த பெண் செளமியாவின் கடிதம் தன்னை ஈர்த்ததாக முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

விபத்தில் சிக்கிய கன்றுக்குட்டி: முதலுதவிக்கு ஏற்பாடு செய்த சுகாதாரத்துறை செயலாளர்!

திருவள்ளூர்: ஆய்வு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சாலையில் விபத்தில் சிக்கிய கன்றுக்குட்டியை மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.