ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Jun 8, 2021, 9:38 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv  bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

பிரசவத்துக்குச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத்துறை கோயில் நிலங்களின் ஆவணங்கள் நாளை வெளியீடு!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்றும் முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்களின் நில அளவை பதிவேடு, சிட்டா ஆகியவை மக்கள் பார்வைக்கு என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

'அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் என்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது' உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: எந்த வழிமுறைகள், வழிகாட்டுதல்படி, மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து, தமிழ்நாடு உள்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகிகளிடம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

சென்னை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகிகள் மீது, 900க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் கொடுத்த பாலியல் புகார்கள் குறித்தான விசாரணைக்கு பள்ளியின் முதல்வர் உள்பட ஐந்து நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர்.

முகக்கவசம், சானிடைசருக்கு விலை நிர்ணயம்!

முகக்கவசம், கிருமிநாசினி, பிபிஇ கிட் உள்ளிட்ட 15 கரோனா தொற்று தடுப்பு மருத்துவ பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

போலந்து ஓபனில் இருந்து வெளியேறிய தீபக் புனியா!

பிரபல மல்யுத்த வீரர் தீபக் புனியா போலந்து ஓபனில் இருந்து வெளியேறினார்.

பிரான்ஸ் அதிபரை அறைந்த சம்பவம்: இருவர் கைது!

மக்கள் சந்திப்பின்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அறைந்த நபர் உள்பட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சசிகலாவிடம் பேசிய அதிமுக தொண்டர் - பரவும் ஆடியோ!

அதிமுக தொண்டர் ஒருவர் சசிகலாவிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.