ETV Bharat / state

karnataka election: கர்நாடகா தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு ஏற்பு... ஈபிஎஸ் எதிர்ப்பு!

author img

By

Published : Apr 22, 2023, 11:37 AM IST

கர்நாடகா தேர்தலில் ஓபிஎஸ் தரப்பினர் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தேர்தல் செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

karnataka election
கர்நாடகா தேர்தல்

சென்னை: கர்நாடகாவில் உள்ள 244 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது பாஜக - காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதற்காக கடுமையான போட்டி நிலவிக் கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக போட்டியிட நினைத்தது. ஆனால் பாஜக அதனை ஏற்கவில்லை. ஆகையால் அதிமுக தனிச்சையாக போட்டியிட களமிறங்கியது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள அதிமுக - பஜக கூட்டணியில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் புலிகேசி தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி, பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக சார்பாக 3 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதில் புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், காந்தி நகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுத் தாக்கல் நிறைவுபெற்றது. வேட்பாளர்கள் பரிசீலனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்றைய (ஏப்ரல் 21) தினம் வேட்பு மனு பரிசீலனையில், புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் முறையான காரணம் வேண்டும் என கேட்டனர்.

அதற்கு முறையாக படிவத்தை பூர்த்தி செய்யவில்லை, நேரம் கடந்து சமர்ப்பிப்பு போன்றவை நிராகரிப்பிற்கான காரணங்களாக தேர்தல் அதிகாரிகள் மூலம் கூறப்பட்டது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளான காந்தி நகரில் குமாரும், கோலார் தங்கவயல் வேட்பாளர் அனந்தராஜூம் வேட்பு மனுவை சுயேட்சையாக கருதி ஏற்றுக்கொண்டது.

தற்போது காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குமாரின் வேட்பு மனுவை அதிமுக சார்பில் ஏற்றுக் கொள்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கோவப்படுத்தி உள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பு மனுவை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநில தேர்தல் செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், "இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்துள்ளது. அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறோம். இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட ஈபிஎஸ்-க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உண்மையான அதிமுக தாங்கள் தான்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை - மடிப்பிச்சை எடுத்து தாய்மார்கள் வேண்டுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.