ETV Bharat / state

"எனக்காய் பிறந்தவள் நீயா" மனதை உருக்கும் 'பெடியா' படத்தின் பாடல்!

author img

By

Published : Nov 5, 2022, 5:04 PM IST

'பெடியா' திரைப்படத்தின் "எனக்காய் பிறந்தவள் நீயா" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

"எனக்காய் பிறந்தவள் நீயா" மனதை உருக்கும் 'பெடியா' படத்தின் பாடல்!
"எனக்காய் பிறந்தவள் நீயா" மனதை உருக்கும் 'பெடியா' படத்தின் பாடல்!

சென்னை: மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் பெடியா (Bhediya) படத்தில் இருந்து "எனக்காய் பிறந்தவள் நீயா" பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

'பெடியா' திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது. மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் 'பெடியா' திரைப்படத்தின் பரபரப்பான டீசர் பெரும் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து "எனக்காய் பிறந்தவள் நீயா" (Ennakai Pirathavale Neeya) எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த மெல்லிசை காதல் பாடலை மிகவும் சிறப்பான முறையில் கார்த்திக் பாடியுள்ளார். அழகான பாடல் வரிகளும் உணர்வுப்பூர்வமான இசையும் கேட்பவர்களை பரவசமடைய வைப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

"எனக்காய் பிறந்தவள் நீயா" பாடலை கேட்கும் போது அது எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கும் என்ற ஆவலும், திரையில் காண வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை அமிதாப் பட்டாச்சாரியா மற்றும் எஸ்.சுனந்தன் எழுதியுள்ளனர். பாடலின் ஒலி வடிவம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை அன்று(நவ.7) முழு பாடலும் வெளியாகிறது.

ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள 'பெடியா' நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: மகளின் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.