ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 820 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Nov 11, 2021, 10:01 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 820 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

சென்னை: கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த புள்ளி விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (நவ.11) வெளியிட்டுள்ளது.

அதில், 'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 22 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் புதிதாக 820 பேருக்குக் கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 266 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் 27 லட்சத்து 12 ஆயிரத்து 404 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 13 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 962 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 66 ஆயிரத்து 140ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 251ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை - 5,55,928
கோயம்புத்தூர் - 2,47,933
செங்கல்பட்டு - 1,72,639
திருவள்ளூர் - 1,19,730
ஈரோடு - 1,05,009
சேலம் - 1,00,487
திருப்பூர் - 96,102
திருச்சிராப்பள்ளி - 77,907
மதுரை - 75,333
காஞ்சிபுரம் - 75,247
தஞ்சாவூர் - 75,711
கடலூர் - 64,248
கன்னியாகுமரி - 62,564
தூத்துக்குடி - 56,406
திருவண்ணாமலை - 55,078
நாமக்கல் - 52,706
வேலூர் - 50,001
திருநெல்வேலி - 49,492
விருதுநகர் - 46,344
விழுப்புரம் - 45,946
தேனி - 43,590
ராணிப்பேட்டை - 43,497
கிருஷ்ணகிரி - 43,704
திருவாரூர் - 41,663
திண்டுக்கல் - 33,145
நீலகிரி - 33,758
கள்ளக்குறிச்சி - 31,460
புதுக்கோட்டை - 30,254
திருப்பத்தூர் - 29,350
தென்காசி - 27,379
தருமபுரி - 28,591
கரூர் - 24,309
மயிலாடுதுறை - 23,320
ராமநாதபுரம் - 20,589
நாகப்பட்டினம் - 21,178
சிவகங்கை - 20,293
அரியலூர் - 16,886
பெரம்பலூர் - 12,086
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,028
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085
ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: அனைவருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை உறுதி செய்யுங்கள் - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.