ETV Bharat / bharat

அனைவருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை உறுதி செய்யுங்கள் - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

author img

By

Published : Nov 11, 2021, 7:33 PM IST

நாட்டில் வயது வந்தோர் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தை வலுப்படுத்துவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (நவ 11) ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாரும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கோவிட் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது: "நாட்டில் உள்ள தகுதியான குடிமக்கள் யாரும் பாதுகாப்பு கவசமான கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விடுபடக்கூடாது என்பதை நாம் அனைவரும் கூட்டாக இணைந்து உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் வீடு வீடாக சென்று, மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.

அனைவருக்கும் தடுப்பூசி உறுதி

தற்போது நாட்டில் உள்ள வயது வந்தோரில் 79 விழுக்காட்டினர் முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 38 விழுக்காட்டினர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள், இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பிரசாரத்தில் தகுதியான மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.

மக்கள் அலட்சியம் வேண்டாம்

கோவிட் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக நாம் நினைக்க கூடாது. உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனாவில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியும், கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கின்றன.

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும். நாட்டில் கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. கோவிட்-19 தடுப்பூசி என்ற பாதுகாப்பு கவசத்துடன், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் மாண்டவியா பேசினார்.

இதையும் படிங்க: Kangana Ranaut : பைத்தியக்காரத்தனம்... தேச துரோகம் - கங்கனாவைச் சாடிய வருண் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.