ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : May 23, 2021, 9:22 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

E TV BHARAT, ஈ டிவி பாரத், ஈ டிவி பாரத் தமிழ்நாடு, 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news,
E TV BHARAT TOP 10 NEWS

1. 'ஊக்கத்தொகை வேண்டாம்... தரமான பிபிஇ கிட் போதும்' - செவிலியரின் ஆடியோ வைரல்

புதுச்சேரி அரசு மருத்துமனையில் பணியாற்றும் செவிலியருக்குத் தரமான பிபிஇ கிட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என செவிலியர் ஒருவரின் ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.

2. தமிழ்நாட்டில் மேலும் 35,483 பேருக்கு தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 35,483 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. '24 மணி நேரமும் இலவச சேவை' - கரோனா தகவல் மையமாக மாறிய பள்ளிவாசல்

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரும்புக்கடை பகுதியில் உள்ள பள்ளிவாசல், கரோனா சேவை மையமாக மாற்றப்பட்டுள்ளது. மதப்பாகுபாடின்றி அனைவரும் வந்து ஆலோசனை மையத்தைப் பயன்படுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

4. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஓரிரு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனையவற்றில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000ஆக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

6. 'எட்டே மாதத்தில் பத்தடி உயரம்' - மியாவாக்கி வனத்தின் மிரட்டும் வளர்ச்சி

எட்டே மாதங்களில் சராசரியாக பத்தடி உயர மரங்கள். மதுரை அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உருவாக்கப்பட்ட மியாவாக்கி வனத்தின் மிரட்டும் வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அது குறித்து சிறப்பு தொகுப்பு.

7. என் தந்தையின் இறுதி ஊர்வலம் தான் எனக்குத் திருப்புமுனை - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தனது தந்தையின் இறுதி ஊர்வலம் தான் தனக்குக் கிடைத்த சிறந்த பாடமாக அமைந்தது எனவும், அதை இப்போதும் நான் மறக்கவில்லை எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தந்தையார் குறித்த நினைவைப் பகிர்ந்துள்ளார்.

8. கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர்கள்: மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த இந்தியா

கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த இரண்டு பாகிஸ்தானியர்களை மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், பாகிஸ்தான் அரசிடம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒப்படைத்துள்ளது.

9. வளைகாப்பில் பரவிய கரோனா - கர்ப்பிணி மருத்துவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10. கிழிந்த காலணியைப் பதிவேற்றிய ஜிம்பாப்வே வீரர்; உதவிக்கரம் நீட்டிய பூமா

தன்னால் சுயமாக காலணிகளைக் கூட வாங்க முடியாத சுழல் நிலவுவதை ட்விட்டரில் பகிர்ந்த ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்லுக்கு உதவி செய்வதாக பூமா நிறுவனம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.