ETV Bharat / state

அதிமுக பொதுக்கூட்டத்தை மறைக்கவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது ..ஜெயக்குமார்

author img

By

Published : Aug 16, 2023, 5:58 PM IST

அதிமுக மாநாட்டை மறைக்கவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

dmk-announced-protest-to-cover-aiadmk-general-meeting-dot-jayakumar
அதிமுக பொதுக்கூட்டத்தை மறைக்கவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது ..ஜெயக்குமார்

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் சென்னை குரோம்பேட்டையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்துயிட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்தும் தமிழக முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நீட் தேர்வை ரத்து செய்யலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆகஸ்ட் 20-ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் திமுக இளைஞரணி சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.’

இந்த நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மதுரை மாநாடு குறித்தான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி சார்பில் முன்னெடுக்கும் போராட்டம் குறித்து, நீட் விவகாரத்தில் திமுக பொது மக்கள் காதில் பூ சுத்தும் வேலை, அல்வா கொடுக்கும் வேலையை மட்டுமே செய்கிறது என விமர்சனம் செய்தார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடத்த எந்த தகுதியும் முகாந்திரமும் திமுகவிற்கு இல்லை என்றும் நீட் தேர்வுக்கு எதிராக அப்போது போராடாமல் இன்று போராடுவது என்ன என்பதை பார்க்கும்போது திமுகவினர் சந்தர்ப்பவாதிகள் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நிச்சயம் தெரியும் என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி இருந்த போது தான் நீட் தேர்வு மசோதாவை எடுத்து வந்தனர். நீட் தேர்வுக்கு போராட தகுதி இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். திமுகவை அதிமுக தூங்கவிடாமல் செய்கிறது என்பதற்கு அவர்களின் போராட்ட அறிவிப்பே உதாரணம். அதிமுக பொதுக்கூட்டத்தை இருட்டடிப்பு செய்ய திமுக அதே தேதியில் போராட்டம் அறிவித்துள்ளது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடுமா?.

குரோம்பேட்டையில் மாணவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் உதயநிதியிடம் அங்கிருந்த மாணவர்கள் கேள்வி எழுப்பிய போது ஓட்டம் பிடித்து வந்துவிட்டார். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என தற்போது கூறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல ஆண்டுகளாக மத்திய ஆட்சிப்பொறுப்பில் அங்கம் வகிக்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?. இனியும் மக்கள் திமுகவை நம்ப தயாராக இல்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு படுதோல்வியை தருவதற்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கூறிய பொய்யை மக்கள் கண்டுபிடித்துவிட்டனர்” என கூறினார்.

இதையும் படிங்க : என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்காதது ஜனநாயகப் படுகொலை - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.