ETV Bharat / state

மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் - ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு

author img

By

Published : Jul 13, 2022, 5:33 PM IST

மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான அலகு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது
தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது

சென்னை: தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதும், பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். எனவே இதனை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் என்ற பெயரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் படி, காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான அலகு ஒன்று மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி, தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாநில அளவிலான திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும். காலநிலை மாற்றம், கண்காணிப்பு, சுற்றுச்சூழல் இலக்கு குறித்து விவாதிக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திட்ட இயக்குநராகவும், மாவட்ட வன அதிகாரி மாவட்ட காலநிலை அதிகாரியாக செயல்படுவார்கள் எனவும் இதனை செயல்படுத்த ஒரு மாவட்டத்திற்கு ரூ.10 லட்சம் வீதம் 38 மாவட்டங்களுக்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:QR Code மூலம் அபராதம் வசூல் - சென்னை போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.