ETV Bharat / state

டிஜிபி, காவல் ஆணையர் பதவியேற்பு.. ரவுடியிசம் ஒழிக்கப்படும் - டிஜிபி உறுதி!

author img

By

Published : Jun 30, 2023, 7:42 PM IST

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் ரவுடியிசத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி சங்கர் ஜிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு காவல் துறை 31ஆவது டிஜிபியாக இன்று சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கோப்புகளை புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு டிஜிபி சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால், “தமிழ்நாடு காவல் துறை டிஜிபியாக இன்று முதல் பொறுப்பேற்கிறேன், முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் சம்மந்தமான பல திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தற்போது சரியாக முறையில் உள்ளது. மேலும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன்” என தெரிவித்தார்.

காவல் துறை மற்றும் பொதுமக்களின் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட போவதாகவும், பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார்களை அளிக்கும் போது காவல் துறையினர் கையாளும் முறையை கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காவல் துறைக்கு வழங்கப்படக்கூடிய விடுமுறை, மெடிக்கல், ஒதுக்கீடு, வீடு வசதி உள்ளிட்டவற்றை மிக சிறப்பாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை தடுக்க ஹாட்ஸ்பாட்டாக அறிவித்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம், இரண்டாண்டுகளில் சாலை விபத்துகள் குறைந்திருப்பதால் மேலும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம்” என தெரிவித்தார்.

புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்ற சந்திப் ராய் ரத்தோர்

சென்னையில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் ரவுடிகளை ஒழிக்கும்
நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்ற சந்திப் ராய் ரத்தோர்: சென்னையின் 109ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் ஆணையர் சங்கர் ஜிவால் கோப்புகளை வழங்கி பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால்

புதிதாக பொறுப்பேற்று கொண்ட காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் கூறுகையில், “சென்னை மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. எனக்கு முன்பு பணிபுரிந்த காவல் ஆணையர்கள் செய்த நல்ல பணிகள் தொடர பாடுபடுவேன். மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும். இப்பணிக்கு சென்னை மக்கள் தங்களின் முழு ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.