ETV Bharat / state

நீட் தேர்வு தேவையில்லை -பாலகிருஷ்ணன்

author img

By

Published : Jul 13, 2021, 2:38 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை நீட் தேர்வு தேவையில்லை என மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன்
செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஒரு வருடம் கொண்டாட்டம்:

விழாவின் முடிவில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இன்னும் கரோனா பாதிப்பு உள்ள காரணத்தால் குறைவான நபர்கள் கொண்டு மூத்த தலைவர் சங்கரய்யா பிறந்த நாளை கொண்டாடவுள்ளோம்.

2021ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதிவரை ஒரு வருடம் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு தேவையில்லை:

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்கள் முடிவு.

உயர் நீதிமன்றதில் நீட் தேர்வு தொடர்பான வழக்கில் நாங்களும் கலந்துகொள்வோம். நீட் தேர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்” என்றார்.

மேலும், பாஜக அரசியல் ஆதாயத்திற்காக கொங்குநாடு என்ற தனிநாடு உருவாக்க நினைக்கிறது என்றும் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க வக்கற்ற அரசாகத்தான் ஒன்றிய அரசு உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு - முன்னாள் எம்பி மைத்ரேயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.