ETV Bharat / state

தமிழ்நாட்டில் 86 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை!

author img

By

Published : Jun 29, 2020, 7:53 PM IST

சென்னை: தமிழ்நாட்டடில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா பாதிப்பு எண்ணிக்கை  சென்னை  chennai  covid-19 case details in tamilnadu
தமிழ்நாட்டில் 86 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள விவரக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று மட்டும் தமிழ்நாட்டில் 3,949 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 86,224ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் 2,167 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று 62 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழ்நாட்டில் கரோனா தாெற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 47,749 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

  • அரியலூர் மாவட்டம் - 462
  • செங்கல்பட்டு மாவட்டம் - 5242
  • சென்னை மாவட்டம் - 55,969
  • கோவை மாவட்டம் - 528
  • கடலூர் மாவட்டம் - 1007
  • தர்மபுரி மாவட்டம் - 70
  • திண்டுக்கல் மாவட்டம் - 438
  • ஈரோடு மாவட்டம் - 136
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 764
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 1876
  • கன்னியாகுமரி மாவட்டம் - 349
  • கரூர் மாவட்டம் - 137
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 134
  • மதுரை மாவட்டம் - 2302
  • நாகபட்டினம் மாவட்டம் -252
  • நாமக்கல் மாவட்டம் - 94
  • நீலகிரி மாவட்டம் - 84
  • பெரம்பலூர் மாவட்டம் - 158
  • புதுக்கோட்டை மாவட்டம் - 194
  • ராமநாதபுரம் மாவட்டம் - 803
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 730‘
  • சேலம் மாவட்டம் - 753
  • சிவகங்கை மாவட்டம் - 189
  • தென்காசி மாவட்டம் - 335
  • தஞ்சாவூர் மாவட்டம் - 424
  • தேனி மாவட்டம் - 626
  • திருப்பத்தூர் மாவட்டம் - 153
  • திருவள்ளூர் மாவட்டம் - 3656
  • திருவண்ணாமலை மாவட்டம் - 1808
  • திருவாரூர் மாவட்டம் - 443
  • தூத்துக்குடி மாவட்டம் - 903
  • திருநெல்வேலி மாவட்டம் - 751
  • திருப்பூர் மாவட்டம் - 160
  • திருச்சி மாவட்டம் - 636
  • வேலூர் மாவட்டம் - 1241
  • விழுப்புரம் மாவட்டம் - 867
  • விருதுநகர் மாவட்டம் - 444

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 375
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 325
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 406 என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.