ETV Bharat / state

கரோனா இறப்பு சான்றிதழ் - உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Sep 16, 2021, 3:25 PM IST

கரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கரோனாவால் பலியானார் என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என ஸ்ரீ ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள் வகுத்துள்ளது.

அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிஇ, பிடெக் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.