ETV Bharat / state

கரோனா பாதிப்பு - 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

author img

By

Published : May 16, 2020, 8:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளதாகவும் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970-லிருந்து 85,940-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649-லிருந்து 2,752-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,920-லிருந்து 30,153-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து இதுவரை 3,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 939 பேர் இன்று வீடு திரும்பினர். கரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். ஆகவே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மொத்தம் 61 மையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 6,970 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்" என்றார்.

மேலும் அவர் வெளியிட்ட மாவட்ட வாரியாக கரோனா தொற்று விவரங்கள்:

அரியலூர் - 348
செங்கல்பட்டு-470
சென்னை-6271
கோயம்புத்தூர்-146
தர்மபுரி-5
திண்டுக்கல்-121
ஈரோடு-70
கள்ளக்குறிச்சி-78
காஞ்சிபுரம்-180
கன்னியாகுமரி-37
கரூர்- 56
கிருஷ்ணகிரி-20
மதுரை-147
நாகப்பட்டினம்-49
நாமக்கல்-77
நீலகிரி-14
பெரம்பலூர் -139
புதுக்கோட்டை-7
ராமநாதபுரம்-31
ராணிப்பேட்டை-81
சேலம்-35
சிவகங்கை- 22
தென்காசி -61
தஞ்சாவூர்- 72
தேனி -79
திருப்பத்தூர்-28
திருவள்ளூர் -527
திருவண்ணாமலை -147
திருவாரூர் -32
தூத்துக்குடி -56
திருநெல்வேலி -180
திருப்பூர்- 114
திருச்சி -67
வேலூர் -34
விழுப்புரம்-308
விருதுநகர்-47
விமான நிலையம் -13

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்கும் நெஸ்ட் கேமராக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.