ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 13, 323 பேருக்கு கரோனா பரிசோதனை

author img

By

Published : Sep 2, 2020, 3:44 PM IST

சென்னை: சென்னையில் நேற்று (செப்டம்பர் 1) ஒரே நாளில் 13 ஆயிரத்து 323 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 323 பேருக்கு கரோனா பரிசோதனை
சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 323 பேருக்கு கரோனா பரிசோதனை

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. நாள்தோறும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவருகிறது. நேற்று (செப்டம்பர் 1) 13 ஆயிரத்து 323 பேருக்கு பரிசோதனைசெய்யப்பட்டது. சென்னையில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 697 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 820 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 107 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 15,531

அண்ணா நகர் - 15,569

ராயபுரம் - 13,578

தேனாம்பேட்டை - 13,269

தண்டையார்பேட்டை - 11701

திரு.வி.க. நகர் - 10448

அடையாறு - 10509

வளசரவாக்கம் - 8588

அம்பத்தூர் - 9514

திருவொற்றியூர் - 4460

மாதவரம் - 4880

ஆலந்தூர் - 5093

சோழிங்கநல்லூர் - 3782

பெருங்குடி - 4452

மணலி - 2157

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.