ETV Bharat / state

தமிழ்நாட்டில் 469 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Feb 9, 2021, 7:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 469 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

469 பேருக்கு கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா செய்திகள்  தமிழ்நாட்டில் 469 பேருக்கு கரோனா உறுதி  Tamilnadu Corona Updates  Taminadu Corona News  Corona confirmed for 469 people in Tamil Nadu
Corona confirmed for 469 people in Tamil Nadu

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 51 ஆயிரத்து 10 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 468 பேருக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 469 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோடியே 61 லட்சத்து 78 ஆயிரத்து 130 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 8 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 328 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 491 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் மூவரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

எண்மாவட்டம்பாதிப்பு
01சென்னை 2,32,603
02கோயம்புத்தூர்54,905
03செங்கல்பட்டு 51,875
04திருவள்ளூர்43,771
05சேலம்32,528
06காஞ்சிபுரம் 29,342
07கடலூர்25,012
08மதுரை21,093
09வேலூர்20,826
10திருவண்ணாமலை19,402
11தேனி 17,111
12தஞ்சாவூர்17,830
13திருப்பூர்18,058
14விருதுநகர்16,602
15கன்னியாகுமரி16,924
16தூத்துக்குடி16,296
17ராணிப்பேட்டை16,153
18திருநெல்வேலி15,637
19விழுப்புரம்15,215
20திருச்சி14,797
21ஈரோடு14,551
22புதுக்கோட்டை11,588
23கள்ளக்குறிச்சி10,891
24திருவாரூர்11,244
25நாமக்கல்11,709
26திண்டுக்கல்11,315
27தென்காசி8,455
28நாகப்பட்டினம்8,502
29நீலகிரி8,255
30கிருஷ்ணகிரி7,099
31திருப்பத்தூர் 7,602
32சிவகங்கை6,679
33ராமநாதபுரம்6,426
34தருமபுரி6,610
35கரூர்5,434
36அரியலூர்4,709
37பெரம்பலூர்2,271

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 943 பேர், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1039 பேர், ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.