ETV Bharat / state

பெண்களைக் காக்க வருகிறது 'காவலன் SOS' செயலி!

author img

By

Published : Dec 6, 2019, 11:53 PM IST

சென்னை: எந்தப் பகுதி பாதுகாப்பு இல்லாத பகுதி என்பதனை பெண்களே தெரிவிக்க புதிய சிறப்பு தொலைபேசி எண் அறிமுகப்படுத்தவுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

kavalan sos app
kavalan sos app

சென்னை சைதாப்பேட்டை மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகளுக்கு 'காவலன் SOS' செயலியின் பயன்பாடு குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விளக்கினார்.

மாணவிகளிடம் தெரிவிக்கும் விஸ்வநாத்
மாணவிகளிடம் விளக்கும் விஸ்வநாத்

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது, "பெண்கள் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இருந்தாலும் இதனை பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பே வரக்கூடாது என்பதை கடவுளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் பாதுகாப்பிற்காக அது தேவை.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவிகள்
நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவிகள்

இந்தியாவிலேயே சென்னைதான் பெண்கள், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான நகரம். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகக் குறைவு என்பது எடுத்துரைக்கிறது.

காவலன் செயலி காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்துள்ளோம். அந்தச் செயலியில் உங்களுடைய பெற்றோர் அல்லது உறவினர்களின் செல்போன் எண்ணை பதிவு செய்துகொள்ளலாம். பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் இருக்கும்போது அந்தச் செயலியில் SOS என்பதனை அழுத்தலாம்.

ஒரு சில விநாடிகளில் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போன் வரும். உதவி செய்வார்கள். அப்போது பேச வேண்டிய சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதில் தானாகவே வீடியோ பதிவு செய்யப்படும்.

இதனோடு புதிய சிறப்பு தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதன்மூலம் இந்தப் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதனை அந்தச் சிறப்பு தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தற்போதைய டிஜிட்டல் காலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக முகம் தெரியாத நபர்களுடன் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மாணவிகளிடம் உறையாற்றிய விஸ்வநாத்

இதனால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முகம் தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட விவரங்களைப் பகிரக் கூடாது. சமூக வலைதளங்களை கவனமாகக் கையாள வேண்டும்" என்று எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் பெண்களுக்குத் தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பும் வழங்கப்பட்டுவருகிறது.

விரைவில் சென்னையில் எந்தப் பகுதி பாதுகாப்பு குறைவு என்பதை பெண்கள் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ஐஸ் ஸ்கேட்டிங் திருவிழாவில் சறுக்கி விளையாடும் மக்களின் க்யூட் புகைப்படங்கள்!

Intro:Body:சென்னையில் எந்த பகுதி பாதுகாப்பு இல்லாத பகுதி என்பதனை பெண்களே தெரிவிக்க புதிய சிறப்பு தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவிகள் மத்தியில் "காவலன் SOS" அப்ளிகேஷன் பயன்படுத்துவது எப்படி என்பதனை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று விளக்கினார்.

சென்னை சைதாப்பேட்டை மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு "காவலன் SOS" செயலியின் பயன்பாடு குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கினார்.

அப்போது அவர் பேசுகையில், "பெண்கள் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளுங்கள். ஆனால் இதனை பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பே வரக்கூடாது. கடவுளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் பாதுகாப்பிற்காக அது தேவை. சென்னை இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான நகரம்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவிலேயே சென்னை தான் மிக குறைவு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவலன் செயலி காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன்இணைத்துள்ளோம். அந்த செயலியில் உங்களுடைய பெற்றோர் அல்லது உறவினர்களின் செல்போன் எண்ணை பதிவு செய்து வைத்து கொள்ளலாம். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருக்கும்போது அந்த அப்-ல் Sos என்பதனை அழுத்தலாம்.

ஒரு சில விநாடிகளில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போன் வரும். உதவி செய்வார்கள். அப்போது பேச வேண்டிய சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதில் தானாகவே வீடியோ பதிவு செய்யப்படும். உதவி செய்வோம்.

மேலும் புதிய சிறப்பு தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளோம். அதன் மூலம் இந்த பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனை அந்த சிறப்பு தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

தற்போதைய டிஜிட்டல் காலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலமாக முகம் தெரியாத நபர்களுடன் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க முகம் தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட விவரங்களை பகிர கூடாது. சமூக வளைதலங்களை கவனமாக கையாள வேண்டும்" என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே சென்னையில் தான் குறைவாக உள்ளது. சென்னையில் பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

விரைவில் சென்னையில் எந்த பகுதி பாதுகாப்பான குறைவு என்பதை பெண்கள் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகப்படுத்த உள்ளோம்" என்றார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா,இணை ஆணையர் மகேஸ்வரி, கல்லூரி முதல்வர் கலைவாணி மற்றும் காவல்துறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.