ETV Bharat / state

கமலின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' பெயரில் பண மோசடி; சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

author img

By

Published : Jul 21, 2023, 8:57 PM IST

நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ பெயரில் லட்சக்கணக்கில் மோசடி செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர் கமல்ஹாசன் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' (Raaj Kamal Films International) என்ற பெயரில் கடந்த 43 ஆண்டுகளாக பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக நளதமயந்தி, விருமாண்டி, விஸ்வரூபம், விக்ரம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் தற்போது நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மணிகண்டன் என்ற நபர் பணத்தை மோசடி செய்து வருவதாக அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் அர்ஜுனர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிப்பாக, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை எனவும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நடிக்க வேண்டும் என்றால் கூகுள்பே மூலமாக பணத்தை அனுப்ப வேண்டும் என மணிகண்டன் என்ற நபர் சமூக வலைதளத்தில் விளம்பரத்தை வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பண மோசடி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

மேலும், சில நாட்கள் கழித்து நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் எனக் கூறி, அவர்களிடமிருந்து தொடர் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் சிக்கி ஆகாஷ் என்ற நபர் 42 ஆயிரம் ரூபாய் ஏமாந்து இருப்பதாக தனது பட நிறுவனத்தில் வந்து கேட்டப்போது, தங்களுக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்துள்ளதாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி செய்யும் நபரால் பட நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், உடனடியாக மோசடியில் ஈடுபடும் நபரை கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் சம்பந்தமாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வங்கி கணக்கை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக, இந்த மோசடி கும்பல் பிரபல பட தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தயாரிப்பாளர் தாணு வி.கிரியேஷன்ஸ் என்ற பெயரிலும் சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இதேபோல, ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரிலும் மும்பையில் பல லட்சம் மோசடி செய்தது குறித்து மத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திரைச் சிதறல்: இந்த வார ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.