ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவம்: 15 காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

author img

By

Published : Oct 24, 2022, 3:58 PM IST

கோவையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் திறமையுடன் துப்பு துலக்கி குற்றவாளிகளை 12 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்ட கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த 15 பேருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு
காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர்: கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரிலிருந்து சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் திறமையுடன் துப்பு துலக்கி குற்றவாளிகளை 12 மணி நேரத்திற்குள் கோவை மாநகர காவல் துறையினர் அடையாளம் கண்டனர். இதையடுத்து 15 பேருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்து, காவலர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தைச்சேர்ந்த காவல் துறையினர் இடம்பெற்றுள்ளனர். 15 பேரில் 5 பேர் காவல் ஆய்வாளர்களும், 4 பேர் உதவி ஆய்வாளர்களும், 4 பேர் தலைமைக் காவலர்களும், ஒருவர் கிரேடு ஒன் கான்ஸ்டபிள் மற்றும் சீனியர் போட்டோகிராபர் என 15 பேருக்கு ரிவார்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேரில் காவல் ஆய்வாளர் கல்யாண கந்தசாமி, சிவகுமார், செந்தில்குமார், அருண், முருகன் ஆகியோரும்; உதவி ஆய்வாளர்களான ஆறுமுகம், கார்த்திகேயன், ஆனந்தராஜன், சோமசுந்தரம் ஆகியோரும்; தலைமைக்காவலரான செந்தில், செந்தில் குமார், பாலபிரகாசம், பிரகாஷ் ஆகியோரும்; முதல்நிலை காவலர் தனராஜ், சீனியர் போட்டோகிராஃபர் பிரசாத் உள்ளிட்ட 15 பேருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதில் உளவுப்பிரிவு, சைபர் கிரைம், ஸ்பெஷல் பிராஞ்ச் உள்ளிட்ட காவல்துறையினர் இடம்பெற்றுள்ளனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அதில் 15 பேர் சிறப்பாக வழக்கு விசாரணையினை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். தனிப்படைகளை தலைமை தாங்கி வழிநடத்திய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கும் டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தி தொலைக்காட்சி ஊழியர் பலி; முதலமைச்சர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.