ETV Bharat / state

திமுக அரசின் ஓராண்டு நிறைவு: ஆவடி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்னென்ன?

author img

By

Published : May 7, 2022, 7:33 PM IST

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து, ஆவடி மாநகராட்சியில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து எல்இடி திரை அமைத்து ஒளிபரப்பப்பட்டது.

திமுக அரசின் ஓராண்டு நிறைவு
திமுக அரசின் ஓராண்டு நிறைவு

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே.7) ஓராண்டு முடிவடைகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் திமுக அரசு செய்த சாதனைகள் எல்இடி திரை அமைத்து பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக ஆவடி மாநகராட்சியில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி வளாகம் அருகே எல்இடி திரை அமைத்து ஒளிபரப்பப்பட்டது.

ஓராண்டில் ஆவடி மாநகராட்சியில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. மாநகராட்சியில் உள்ள ஏழு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தது, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டது, திருமுல்லைவாயில் ஆவடி நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தது, திருமுல்லைவாயிலில் உள்ள அரபாத் ஏரியை தூய்மை படுத்தியது போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து ஒளிபரப்பப்பட்டது.

ஆவடி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வீடியோ

தொடர்ந்து ஆவடி 37ஆவது வார்டு குப்பை கிடங்கிற்கு அருகில் "மியாவாக்கி திட்டத்தின்" கீழ் அடர்ந்த காடு உருவாக்கும் திட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகர், 37 வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.