ETV Bharat / state

மேகதாது அணை- முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்

author img

By

Published : Jul 12, 2021, 12:12 PM IST

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

cm mk stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், விசிக சார்பில் திருமாவளவன் , ரவிக்குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி, அருள், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் வி.பி.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில்
கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், மதிமுக சார்பில் சதன், திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். .

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடக அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

அனைத்து கட்சி குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் உரிமையை உறுதி செய்வது குறித்து நேரில் வலியுறுத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - 13ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.