ETV Bharat / state

"ஓமனில் கடத்தப்பட்ட தமிழக மீனவரை மீட்க வேண்டும்" - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 2:19 PM IST

Updated : Nov 21, 2023, 6:08 PM IST

CM MK Stalin wrote letter to EAM Jaishankar: ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

CM MK Stalin wrote letter to EAM Jaishankar
அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டு வரவும், ஓமனில் மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த மீனவக் குழுவினரின் சம்பளப் பிரச்னையைத் தீர்க்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (நவ.21) கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், “ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184. அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில் பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததுள்ளார். மேலும், அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெத்தாலிஸ் என்பவரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாக கண்டுபிடித்து இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பெத்தாலிஸ்-இன் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார்” என்பதை முதலமைச்சர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஓமன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலியை மீட்டு தாயகம் கொண்டு வர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: தென்காசி அருகே 22 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் சுப்பிரமணியபுரம்.. பொதுமக்கள் போராட்டம்!

Last Updated : Nov 21, 2023, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.