ETV Bharat / state

பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர்! - சிசிடிவி காட்சியால் உண்மை வெளியானது

author img

By

Published : May 6, 2019, 8:58 PM IST

சென்னை: கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்

சென்னை கோயம்பேடு லெமன் மார்க்கெட் அருகே நேற்று மதியம் போதையில் இருவர் இடையே ஏற்பட்ட சண்டையிடல் கீழே விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவரின் சடலம் அருகே அமர்ந்திருந்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் பார்த்தவர்கள் கூறிய சாட்சிகளின் அடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் பிரான்சிஸ் கிருபா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வந்தனர்.

பொதுமக்கள் கருத்து

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பிரான்சிஸ் கிருபா மடியில் கொலையுண்ட நபர் படுத்து கிடப்பதாகவும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர், அவராக உயிரிழந்தாரா? அல்லது பிரான்சிஸ் கிருபாதா கொலை செய்தாரா? என்பது குறித்து காவல்துறையினரால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறினர். மேலும், இறந்த நபர் வடமாநிலத்தவர் என்றும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கை விசாரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனையின் முடிவை பொறுத்தே இந்த வழக்கில் கொலையா அல்லது வேறு ஏதேனும் நோயின் காரணமாக உயிரிழந்தாரா என்ற முடிவுக்கு வர முடியும் என கோயம்பேடு காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர், மாரடைப்பு ஏற்பட்டு, வலிப்பு நோயால் உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. வலிப்பு ஏற்பட்டபோது எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா இரும்புக் கம்பியை கொடுத்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். சிசிடிவியில் அடையாளம் தெரியாத அந்த நபருக்கு எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா உதவி செய்யும் காட்சிகள் 20 நிமிடங்கள் பதிவாகியுள்ளன. அதை ஆய்வு செய்தபிறகே பிரான்சிஸ் கிருபா கொலை செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

*பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை..........*

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா பள்ளிப் படிப்பை தொடர முடியாத இவருக்கு கலை இலக்கியங்களில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது சுமார் ஏழு கவிதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார் வெண்ணிலா கபடி  குழு , அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட 16 திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தற்போது பைரி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

நேற்று மதியம் கோயம்பேடு லெமன் மார்க்கெட் அருகே இருவர் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதாகவும் அதில் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்து விட்டதாகவும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் ஒரு நபர் அங்கு இறந்து கிடப்பதையும் அதன் அருகே மற்றொரு நபர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்துள்ளனர். மேலும் அந்த நபர் எங்கும் ஓடவில்லை

அவரை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஆக இருக்கக் கூடும் என்ற  போலிசார் முடிவு செய்துள்ளனர்

மேலும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நபர் 
எந்த விவரங்களையும் சரியாக கூறாததால், போலீசாரால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சிக்கல் ஏற்றப்பட்டது. பிடித்து வரப்பட்ட நபர் குடிபோதையில் இருந்ததால் அவர்களால்  விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது ஒரு சில தகவல்களை கூறி இருக்கிறார் சொந்த ஊர் திருநெல்வேலி எனவும் கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து அவர் கூறிய தகவலின் அடிப்படையில் அவருக்கு தெரிந்த கேகே நகரில் உள்ள அவரது நண்பர்களை கூட்டி வந்து விசாரணை செய்த போது தான் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது

பிடித்து வரப்பட்ட நபர் பிரான்சிஸ் கிருபா என்றும் அவர் பிரபல எழுத்தாளர் பல கவிதைகள் மற்றும் கட்டுரைகள் சினிமா திரைப்பட படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்பதும் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சம்பவ இடத்தில் பார்த்தவர்கள் கூறிய சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வந்தனர் ஆனால் பிரான்சிஸ் கிருபா தான் கொலை செய்தாரா என்பதை நிருபிப்பதற்ககு ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்


சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பிரான்சிஸ் கிருபா மடியில் கொலையுண்ட நபர் படுத்து கிடப்பதாகவும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த நபர் ஏற்கனவே உயிரிழந்து உள்ளாரா ? அல்லது பிரான்சிஸ் கிருபா தான் கொலை செய்தாரா என்பது குறித்து கோயம்பேடு போலீசாரால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை.

மேலும் இறந்த நபர் வடமாநில நபர் என்றும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை இதனால் வழக்கை விசாரிப்பதில் பெரும் சிக்கல் கோயம்பேடு போலீசாருக்கு நிலை வந்தது

இதனையடுத்து உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் முடிவை பொறுத்தே இந்த வழக்கில் கொலையா அல்லது அல்லது வேறு ஏதேனும் நோயின் காரணமாக உயிரிழந்தாரா என்ற முடிவுக்கு வர முடியும் என கோயம்பேடு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.