ETV Bharat / state

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி!  காவல் துறை தீவிர விசாரணை

author img

By

Published : Aug 19, 2019, 2:47 PM IST

Updated : Aug 19, 2019, 3:12 PM IST

சென்னை :ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடிவரை மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட நூறு பேர் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி மோசடி

சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பானுமதி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்திவந்துள்ளார். இந்நிலையில், 2015ஆம் ஆண்டு நூறு பேரிடம் ரூ.2 கோடிவரை வசூல் செய்துவிட்டு மோசடி செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

Chitfund  தீபாவளி சீட்டு நடத்தி பணமோசடி  chit fund cheating
தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி மோசடி

இதைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பானுமதிக்குச் சொந்தமான ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

Chitfund  தீபாவளி சீட்டு நடத்தி பணமோசடி  chit fund cheating
தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி மோசடி செய்தவர்

மேலும் பானுமதியைப் பற்றி ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Intro:Body:தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ஏமாற்றிய பெண்ணை பிடிப்பதற்கு பொதுமக்கள் உதவியை நாடும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பானுமதி என்பவர் தனது மகன் யுவராஜ் மற்றும் மகள்கள் ஷீலா, சுகன்யா ஆகியோருடன் ஏலச்சீட்டு நடத்தினார். பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளிப் பரிசு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் பானுமதி தலைமறைவானார்.

அவர்களிடம் பணம் கட்டி ஏமாந்த 100 பேர் சென்னை கிண்டியில் உள்ள சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பானுமதி குடும்பத்தினர் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பானுமதிக்கு சொந்தமான ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

தொடர்ந்து பணம் கட்டி ஏமாந்தவர்களுக்கு திருப்பி வழங்கும் நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செய்துள்ளனர். இந்நிலையில் பானுமதி குடும்பத்தினரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள்  ((044 - 22504332, 94981 43072)) தகவல் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.Conclusion:
Last Updated : Aug 19, 2019, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.