ETV Bharat / state

புதுமைப்பெண் திட்டத்தின் 2ஆம் கட்டத்தினை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Feb 8, 2023, 7:49 PM IST

திருவள்ளூர் பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று நடந்த நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்தார்.

Chief Minister Stalin launched the 2nd phase of Pudhumai Penn Scheme
புதுமைப்பெண் திட்டத்தின் 2ஆம் கட்டத்தினை துவங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

புதுமைப்பெண் திட்டத்தின் 2ஆம் கட்டத்தினை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியின் உள் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைத் துவங்கி வைத்து 10 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் 1.8 லட்சம் மாணவிகள், இந்தத் திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப்பள்ளிகளில் கல்வி பயின்று 78 அரசு மற்றும் அரசு உதவி பெறும் இதர தனியார் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் 1,473 பேரில் 949 கல்லூரி மாணவிகளுக்கு இன்று புதுமைப்பெண் திட்டத்தின் வங்கி பற்றட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் நாசர் மற்றும் தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.