ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

author img

By

Published : Jul 23, 2022, 12:49 PM IST

சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா  - 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

சென்னை : சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வவேலு, வரம் 28 ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. இதல் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழா் நடைபெறும்.

இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கம் 6 ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம். 187 நாட்டின் 1500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம்.
நேரு அரங்கில் 24 ம் தேதிக்கு முன்பாக முன் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும். தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. ( 4 மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுகிறது))

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். தமிழர்கள் உபசரிப்பில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல, உணவு அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வீரர்களுக்கு வழங்கப்படும். முதல்வர் அன்றாடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் விசாரித்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் நடந்தது விரும்பத்தாகத சம்பவத்தில், அரசு நடுநிலையாக செயல்பட்டு தவறிழைத்தோருக்கு தண்டனை பெற்றுத் தரும் என்று அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க : உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி; சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.