ETV Bharat / state

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: போக்குவரத்தில் பல்வேறு மாற்றம்!

author img

By

Published : Apr 7, 2023, 2:56 PM IST

பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப்ரல் 8) சென்னை வருகையையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாரதப் பிரதமர் 08.04.2023 அன்று சென்னைக்கு வருகை தந்து புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கவும், சென்டரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் மற்றும் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்டரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது என்பதை பயணிகளுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

பிரதமர் அவர்களின் விவேகானந்தர் இல்லத்திற்கு வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.

போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வானங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்று பாதையானது மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படுத்தப்படும்.

மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 02 மணி முதல் மாலை 08 மணி வரை இடையிடையே திசைமாற்றம் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும். அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி புதிய திருப்பிவிடப்படும்.

  • அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
  • பூந்தமல்லி நெடுஞ்சலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
  • வெளியேறும் திசையில் செல்லும் வாகங்கள் NRT புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மிண்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
  • ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
  • லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
  • கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பி விடப்படும்.
  • அதிகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Corona virus: சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி.. அதிகரிக்கும் கரோனாவால் மாநகராட்சி அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.