ETV Bharat / state

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

author img

By ANI

Published : Dec 5, 2023, 7:15 AM IST

சென்னையில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
சென்னையில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

Chennai rain update: மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார், மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (டிச.05) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், “தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல், இன்று காலை தென் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும், மச்சிலிப்பட்டினத்துக்கும் இடையே கடுமையான புயலாகக் கரையைக் கடக்கும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் ஏற்படுத்திய சேதங்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழிலன், கருணாநிதி, பரந்தாமன் மற்றும் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மேலும், இந்த புயலின் தாக்கத்தால் சென்னையில் மட்டும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சென்னை போலீசார் நேற்று தெரிவித்தனர். மேலும், புயலின் நகர்வுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்றும், இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது. புயல் ஆந்திராவைக் கடப்பதால், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் ஆகிய இடங்களில் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தது.

சென்னையில் நேற்று மழையுடன் பலத்த காற்று வீசியதால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வாலாஜா சாலை, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சேப்பாக்கம், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் பிற தாழ்வானப் பகுதிகள் உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சென்னையில் பல சாலைகள் நீர் தேக்கம் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளம் போல் மாறிய சென்னை விமான நிலையம்! வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.