ETV Bharat / state

திருமணம் செய்து கொள்வதாக பெண் குரலில் பேசி மோசடி!

author img

By

Published : Apr 9, 2019, 9:13 PM IST

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக பெண் குரலில் பேசி மோசடி செய்த நபரிடம் பல ஆயிரங்களை இழந்த இளைஞர் போலீசாரிடம் புகார்.

சென்னை வடபழனி காவல்துறை

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடி வந்துள்ளார். அப்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறி அவரிடம் பழகியுள்ளார்.

பின் திருமண செய்து கொள்ள ஹரிணி ஒப்புதல் அளித்ததால், 60 ஆயிரம் ரொக்கம் பணம் மற்றும் குடும்பம் நடத்தத் தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் ஆனந்த் வாங்கி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆனந்த் கேட்டவுடன், ஹரிணி மாயமாகியுள்ளார். இதனையடுத்து ஆனந்த் அவரை தேடியும் கிடைக்காததால், வேறொரு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹரிணி எண்ணுக்கு ஆனந்த் அழைத்த போது, மீண்டும் பேச்சு கொடுத்து பணம் கேட்டுள்ளார். அந்த பெண் தன்னை ஏமாற்றுவதாக ஆனந்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து தன்னை ஏமாற்றுபவரை கையும் களவுமாக பிடிக்க ஆனந்த் திட்டமிட்டார். அந்த சமயம் ஹரிணி பணம் தேவைப்படுவதாக ஆனந்திடம் கேட்டுள்ளார். நேரில் வந்து பணத்தை வாங்கி கொள்ள ஆனந்த் வற்புறுத்தியுள்ளார். அப்போது நேரில் வர முடியாது என்றும், தன் சித்தப்பா மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆனந்த், சித்தப்பாவாக வந்த நபரை, வடபழனி காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்தார். விசாரணை செய்ததில் மோசடி செய்தவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த செந்தில் என தெரியவந்துள்ளது. பிடிபட்ட செந்தில்தான் பெண் குரலில் பேசி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் சமரசம் பேசி அனுப்பியது ஆனந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டவர் மோசடி செய்த பணத்தை மீட்டு தந்தால் மட்டும் போதும் என கேட்டதால், செந்திலிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு சமரசம் பேசி அனுப்பியதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

*திருமணம் செய்து கொள்வதாக பெண் குரலில் பேசி மோசடி செய்தவர் பிடிப்பட்டார். சமரசம் செய்து வைத்த போலீசார் மீது சந்தேகம்!*

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடி வந்துள்ளார்.அப்போது   கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறி பழகியுள்ளார்.பின் திருமண செய்து கொள்ள ஹரிணி ஒப்புதல் அளித்ததால், பழகிய பின் 60 ஆயிரம் பணம் மற்றும் குடும்பம் நடத்தத் தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் ஆனந்த் வாங்கி கொடுத்துள்ளார்.
பின் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆனந்த் கேட்டவுடன், ஹரிணி மாயமாகியுள்ளார் .

இதனையடுத்து ஆனந்த் வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளார்.இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்,ஹரிணி எண்ணுக்கு ஆனந்த் அழைத்த போது, மீண்டும் பேச்சு கொடுத்து பணம் கேட்டுள்ளார்.பெண் ஒருவர் தன்னை ஏமாற்றுவதாக ஆனந்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து தன்னை ஏமாற்றுபவரை கையும் களவுமாக பிடிக்க ஆனந்த் திட்டமிட்டுள்ளார். அந்த சமயம் ஹரிணி பணம் தேவைப்படுவதாக ஆனந்திடம் கேட்டுள்ளார்.நேரில் வந்து பணத்தை வாங்கி கொள்ள ஆனந்த் வற்புறுத்தியுள்ளார்.அப்போது நேரில் வர முடியாது என்றும் ,தன் சித்தப்பாவை அனுப்பவதாகவும், அவரிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆனந்த் வந்த நபரை ,வடபழனி போலிசாரிடம் பிடித்து கொடுத்துள்ளார். விசாரணை செய்ததில் மோசடி செய்தவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த செந்தில் என தெரிய வந்துள்ளது.பிடிபட்ட செந்தில் தான் பெண் குரலில் பேசி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த விவாகரத்தில்  வடபழனி போலிசார் வழக்கு பதிவு செய்யாமல் சமரசம் பேசி அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் மோசடி செய்த பணத்தை மீட்டு தந்தால் மட்டும் போதும் என கேட்டதால், செந்திலிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு சமரசம் பேசி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர் .

கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.