ETV Bharat / state

சென்னை ஐஐடியில் கேரள மாணவர்கள் போராட்டம் - போலீசார் அப்புறப்படுத்த முயற்சி!

author img

By

Published : Nov 18, 2019, 12:15 PM IST

சென்னை: ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை குறித்து நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

chennai iit kerala native student protest against fathima latheef suicide

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது தந்தை தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தார். மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அப்புறப்படுத்த முயற்சிக்கும் காவல் துறையினர்

இந்நிலையில், கேரளாவிலிருந்து வந்து சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள், ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை குறித்து நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஐஐடி நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து ஐஐடி இயக்குநரிடம் மனுவும் அளித்துள்ளனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்!

Intro:சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம்


Body:சென்னை ஐஐடியில் கேரள மாணவர்கள் போராட்டம்

சென்னை

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என கேரள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் செய்து விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது தந்தை தமிழக அரசுக்கு நேரில் மனு அளித்துள்ளார்.
மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்து சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஐஐடி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து ஐஐடி இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.