ETV Bharat / state

நரம்பியல் நோய்களுக்கு ரோபோ... சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு...

author img

By

Published : Mar 5, 2022, 7:45 AM IST

பக்கவாதம், மூட்டுவலி, பெருமூளைவாதம் உள்ளிட்ட நரம்பியல் நோய்களுக்கு பயிற்சியளிக்க சென்னை ஐஐடி ரோபோவை உருவாக்கிவருகிறது.

நரம்பியல் நோய்களுக்கு பயிற்சியளிக்க ரோபோ
நரம்பியல் நோய்களுக்கு பயிற்சியளிக்க ரோபோ

சென்னை: பக்கவாதம், மூட்டுவலி, பெருமூளைவாதம், பார்கின்சன் உள்ளிட்ட நரம்பியல் மற்றும் தசைக் கூட்டு நிலை நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தோள்பட்டை அல்லது முழங்கையில் மூட்டு இயக்கத்திற்கான பயிற்சி அளிக்க தனித்தனியாக, 'அரிபோ' என்னும் ரோபோவை சென்னை ஐஐடி உருவாக்கிவருகிறது.

இதனை உருவாக்க சென்னை ஐஐடி ரோபோடிக்ஸ் மோஷன் டெக்னாலஜி நிறுவனமான 'போர்டெஸ்கேப்' உடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சமூகப் பொறுப்புணர்வு நிதி திட்டத்தில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியையும் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலகத்தால் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், கை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு புதுமையான அரிபோ (AREBO - Arm Rehabilitation Robot) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அரிபோ என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ரோபோவாகும். பக்கவாதம், மூட்டுவலி, பெருமூளைவாதம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் மற்றும் தசைக் கூட்டு நிலையில் இருப்போருக்கு தோள்பட்டை அல்லது முழங்கையில் மூட்டு இயக்கத்தை இந்த ரோபோ தனித்தனியாக பயிற்றுவிக்கும், நோயாளியின் இடது அல்லது வலது கையுடன் இணைக்க செய்ய 'அரிபோ' ரோபோவின் வடிவமைப்பு உதவுவதுடன், கைக்கு பாதுகாப்பான பயிற்சியும் அளிக்கச் செய்கிறது.

நரம்பியல் நோய்களுக்கு பயிற்சியளிக்க ரோபோ
நரம்பியல் நோய்களுக்கு பயிற்சியளிக்க ரோபோ

சென்னை ஐஐடி-யின், மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதனங்கள் மேம்பாட்டிற்கான டிடிகே மையத்தின் தலைமைப் பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன், வேலூர் சி.எம்.சி.யின் சிவக்குமார் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்படும் இத்தகைய கண்டுபிடிப்புகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் விதமாக உள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடிபேராசிரியரும், மறுவாழ்வு ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன் கூறுகையில், "இயக்க இயலாமையால் தவிப்போருக்கு மலிவான விலையில் சாதனங்கள் கிடைக்க இந்தத் திட்டம் ஊக்குவிக்கும். சி.எம்.சி.யின் உயிரிப் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிபுணத்துவம் இதற்கு பயன்படுத்தப்பட உள்ளது" என்றார்.

வேலூர் சி.எம்.சி. உயிரிப்பொறியியல் துறையின் தலைவரான பேராசிரியர் சிவக்குமார் பாலசுப்பிரமணியன் கூறுகையில் "மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவையான மறுவாழ்வு ரோபோக்களை எளிமைப்படுத்துவதை நோக்கத்தின் விளைவாக அரிபோ (AREBO) ரோபா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனைகளக்கு எளிமையான, கையடக்கமான, பாதுகாப்பான ரோபோ பயன்படுத்தப்படும்.

இந்த சாதனத்தை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன், வழக்கமான மருத்துவ நடைமுறைகளில் இந்த சாதனம் எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கண்டறிய போகிறோம். மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இதன் கூடுதல் மதிப்பு குறித்த புரிதல் தேவைப்படுகிறது" என்றார்.

ஐஐடிபேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன்

மேலும் போர்டெஸ்கேப் நிறுவனத்தின் நிதியுதவியுடன், சென்னை ஐஐடி-யும், கொல்கத்தாவில் உள்ள நியூரோசயின்ஸ் நிறுவனமும் இணைந்து பக்கவாதம் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த நோயாளிகளின் வெளிப்புற எலும்புக்கூடு (exoskeleton) உருவாக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.