ETV Bharat / state

புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!

author img

By

Published : Oct 1, 2020, 1:21 PM IST

Updated : Oct 1, 2020, 2:32 PM IST

Chennai HC upset on women and child abuse case
Chennai HC upset on women and child abuse case

13:17 October 01

சென்னை: புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிர்ஷ்டவசமானது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, இடம், மருத்துவ உதவிகளை வழங்கி,தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை முன்னதாக விசாரித்த உயர் நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று (அக்.1) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி, திருப்பூர் மாவட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்தித்தாள்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார்.

அதற்கு நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணிக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் இல்லை, உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. மேலும், புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை என நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இது துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர், திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு!

Last Updated : Oct 1, 2020, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.