ETV Bharat / state

CCTV Footage:தனியார் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி..!

author img

By

Published : Dec 20, 2021, 7:29 AM IST

சென்னையில்,தனியார் வங்கியில் பின் பக்க ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

CCTV Footage:தனியார் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி..!
CCTV Footage:தனியார் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி..!

சென்னை: வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை வங்கியிலிருந்து அலாரம் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் வியாசர்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்கள் கைது

அதன் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அங்கு சென்றனர். அப்போது வங்கி கட்டடத்தின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து இரண்டு மர்ம நபர்கள் வெளியே வந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடிக்க முற்பட்டபோது ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

CCTV Footage:தனியார் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி..!

ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் வியாசர்பாடி சர்மா நகர் எஸ்டேட்டில் பதுங்கி இருந்த நேபாள நாட்டைச் சார்ந்த ’தான் பகதூர்(40)’ என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கி இருந்த கேளம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவியுங்கள் - திருமாவளவன் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.